செம மாஸ்... செப்டம்பர் 29ல் பூமிக்கு வரும் புதிய நிலா.... வெறும் கண்களால் பார்க்க முடியுமா?

 
பூமிக்கு புதிய நிலா

 அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா.  நாசா அமைப்பு பூமியை சுற்றி வரும் விண்கற்கள் மற்றும் வான்பொருட்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நிலையாக மற்றும் நகர்ந்து கொண்டிருக்கும்  34,725 வான்பொருட்களை  கண்காணித்து வருகிறது. இந்நிலையில், ‘2024 பி. டி.5’ என்ற ஒரு சிறிய விண்கல், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு அடுத்து வர இருக்கும்  மாதங்களில் பூமியின் அருகே சுற்றி வரும் எனத் தெரிகிறது.

 இந்த விண்கல்லை “இரண்டாவது நிலவு” என்கின்றனர் விஞ்ஞானிகள்.  இது குறித்து நாசாவின் கணிப்பின் படி, ‘2024 பி. டி.5’ விண்கல், செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை பூமியைச் சுற்றி, நிலவைப் போலவே ஒரு நிழல் நிலவாக மாறும். இது நமது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.  இந்த தனித்துவமான நிலைமையானது, நாசா மற்றும் உலகின் பிற விண்வெளி அமைப்புகளால் ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.  

பூமிக்கு புதிய நிலா

இந்நிகழ்வு மூலம் பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் விண்கற்களின் இயக்கம் ஆகியவை எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதற்கான தகவல்களை அளிக்கும். ‘2024 பி. டி.5’ போன்ற விண்கற்கள் நிலவின் பாதையில் சுற்றுவதைப் பார்ப்பது அவ்வளவு சாதாரணமான விஷயமே  அல்ல, இதன் மூலம் புதிய விஞ்ஞானத் தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web