உஷார்!! புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!! அடுத்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கை!!

உஷார்!! புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!! அடுத்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கை!!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில், அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை 15ம் தேதி ஆந்திர – ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

உஷார்!! புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!! அடுத்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கன மழையும், 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உஷார்!! புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!! அடுத்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உஷார்!! புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!! அடுத்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கை!!

மேலும் ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உஷார்!! புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!! அடுத்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கை!!

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web