ராமேஸ்வரத்தில் புதிய பாலம், பாம்பன் எக்ஸ்பிரஸ் சேவை... நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

 
ராமேஸ்வரம் பாம்பன்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் பாம்பன் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை ஏப்ரல் 6 ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதற்கென ராமேஸ்வரத்தில் நாளை ஏப்ரல் 6ம் தேதியன்று நடைபெறும் விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதுடன், ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்ற புதிய தினசரி ரயில் சேவையையும் அன்று தொடங்கி வைக்கிறார். 

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம்

தற்போது அந்த புதிய ரயில் சேவையின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16104 தினசரி பிற்பகல் 3.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்று மறுநாள் அதிகாலை 3.10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.

பாம்பன் பாலம்

மறு மார்க்கத்தில் பாம்பன் ரயில் வண்டி 16104 தினசரி மாலை 6.05 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 5.45 மணியளவில் ராமேசுவரம் வந்தடைகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web