உஷார்!!! இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வெளுக்கப் போகும் கனமழை!

உஷார்!!! இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வெளுக்கப் போகும் கனமழை!

இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் பொதுமக்கள் உஷாராக, பாதுகாப்பான இடங்களில் இருக்கவும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று அக்டோபர் 27ம் தேதி உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உஷார்!!! இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வெளுக்கப் போகும் கனமழை!

அதில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகலாம் . படிப்படியாக இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறும்.

இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

உஷார்!!! இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வெளுக்கப் போகும் கனமழை!

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உஷார்!!! இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வெளுக்கப் போகும் கனமழை!

அக்.28, 29 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமானது முதல் மிக கனமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார்!!! இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வெளுக்கப் போகும் கனமழை!

இது தவிர தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web