நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது... தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு!
நடிகர் விஜய் பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தொகுதி வாரியாக ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அதே போல் நடப்பாண்டிலும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார்.
முதற்கட்டமாக, ஜூன் 28ம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது . கோவை, ஈரோடு, மதுரை உட்பட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். இதில் 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2ம் கட்டமாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கி வருகிறார்.
இந்நிகழ்வில் நடிகர் விஜய் “ நீட் தேர்வால் பல்வேறு மாணவ , மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது.மாநில கல்வியில் படித்த மாணவர்களை தேசிய கல்வியில் தேர்வு எழுத சொல்வது அநீதி” எனக் கூறியுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!