யானையைத் தின்னும் அவலம்... உணவுக்காக 723 வனவிலங்குகளைக் கொல்ல நமீபியா அரசு திட்டம்!
நமீபியாவில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக 723 வன விலங்குகளை வேட்டையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத வறட்சியால் நமீபியாவில் சுமார் 14 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமீபியா அரசின் இந்த முடிவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Namibia is planning to kill its wild animals.
— Civil Learning (@CivilLearning1) September 1, 2024
300 zebras
83 elephants
100 elands
30 hippopotamuses
But why?
More than 150 animals have already been culled.
About 63 tonnes of meat has been extracted from the culling of animals.
Namibia is facing worst drought in a century.… pic.twitter.com/gM06xZvqIZ
தென்னாப்பிரிக்காவின் கணிசமான பகுதியை வறட்சி பாதித்துள்ளது. இப்பகுதியில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டது.
கடந்த பத்தாண்டுகளில் 2018 முதல் 2021 வரை பல நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், இந்த குறிப்பிட்ட வறட்சி குறிப்பாக கடுமையானது மற்றும் பரவலாக உள்ளது. நமீபியாவின் உணவுக்காக வனவிலங்குகளை வேட்டையாடும் திட்டத்தில் 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 50 ஆப்பிரிக்கச் சிறுமான்கள், 60 எருமைகள், 100 நீலக் காட்டுமான் மற்றும் 100 எலாண்ட்ஸ் (ஒரு வகை மான்) ஆகியவைகளை வேட்டையாட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!