’மட்டன் பீஸ் வைக்கல’. போர்க்களமான திருமணம்.. கடுமையாக மோதிக்கொண்ட மணமக்கள் உறவினர்கள்!
நம் நாட்டில் நடைபெறும் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். குறிப்பாக விருந்து வைப்பதெல்லாம் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் ஒரு திருமணம் நடந்தது. நவிப்பேட்டையைச் சேர்ந்த பெண்ணுக்கும், நந்திப்பேட்டையைச் சேர்ந்த ஆணுக்கும் திருமணம் நடந்தது.
அந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவில் ஆட்டு இறைச்சி பீஸ் இல்லாததால் மணமக்கள் உறவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கிச்சன் ஸ்பூன், கற்கள், கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் 8 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!