பயணிகள் மகிழ்ச்சி... முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு!
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு நேரத்தில் முத்துநகர் விரைவு ரயில் (12693/12694) இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வண்டி எண் 12694ல் இன்று நவம்பர் 15ம் மற்றும் நவம்பர் 17ம் தேதி ஆகிய இரு தினங்களும் வண்டி எண் 12693ல் நவம்பர்16ம் தேதி மற்றும் நவம்பர் 18ம் தேதி ஆகிய நாட்களிலும் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது போல் திருவனந்தபுரம் - மதுரை (16343/16344) ரயில்களிலும் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!