எல்ஐசி ’அரசியல் கோளாறு ... தொழில்நுட்ப பிரச்சனை கிடையாது’... எம்பி வெங்கடேசன் ஆவேசம்!
இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியின் முகப்பு இணையதளம் கடந்த 2 நாட்களுக்கு முன் முழுவதுமாக ஹிந்தியில் இருந்தது. ஆங்கிலமே அதில் இல்லை. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
எல்.ஐ.சி இணைய தள இந்தி பிரச்சனையில் "தொழில்நுட்பக் கோளாறு" என்று எல்ஐசி விளக்கம் அளித்தது.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 22, 2024
எல் ஐ சி யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை நுழைக்க நடந்துள்ள ஏற்பாடு.
இதனால்… pic.twitter.com/Zbh5W0G5FT
இது குறித்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் "தொழில்நுட்பக் கோளாறு" என்று எல்ஐசி விளக்கம் அளித்தது. எல் ஐ சி யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர 3 வது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை நுழைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதனால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை தானே தவிர வேறு காரணங்கள் எதுவுமே இல்லை. மத்திய அரசின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட "அரசியல் கோளாறு என பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!