வாகன ஓட்டிகளே உஷார்... இருசக்கர வாகனம் மீது கார் மோதி 3 பேர் பலி!

 
கொலை

நாடு முழுவதும் சுங்கசாவடிகள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில், வாகனங்கள் வேகமாக செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகமாக செல்லும் வகையில் சாலைகள் இருந்தாலும், உயிர் பாதுகாப்பு முக்கியம். விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. வாகன ஓட்டிகளே.. உங்கள் பயணத்தை முறையாக திட்டமிடுங்க. கொஞ்சம் முன்னாடியே கிளம்பிச் செல்லுங்க. அவசரமாக வாகனத்தை இயங்கி அடுத்தவர்களுடைய உயிருக்கும் உலை வைக்காதீங்க.

திருப்பதி சென்று தரிசனம் முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக இன்னொருவரின் அஜாக்கிரதையால் உயிரிழந்திருக்கின்றனர். 3 பேரின் குடும்பங்களும் உரியவரை இழந்து தவிக்கின்றது. சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்றுக் கொண்டிருந்தது. மயிலம் அருகே ​​திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக தாறுமாறாக சென்றது.

விபத்து

அப்போது, ​​சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும், மோட்டார் சைக்கிள்கள் மீதும் ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதி விபத்து ஏற்பட்டது. பாதசாரிகள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

படுகாயமடைந்தவர்களை மீட்கும் போது, ​​சாலையில் நடந்து சென்ற ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் என 3 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பூபாலன், அய்யப்பன் என்பதும், இவர்கள் திருப்பதிக்கு சென்று தரிசனம் முடித்து விட்டு தங்களது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு திரும்பி சென்றவர்கள் என்பது தெரியவந்தது. விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரிக்கின்றனர். 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web