இன்று தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு!

இன்று தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அந்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இன்று மார்ச் 17ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார் பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும். அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!