பயங்கர தீ விபத்து...1,000க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்... கோடிக்கணக்கில் நஷ்டம்!
போலந்து நாட்டில் புகழ்பெற்ற வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சுமார் 1,000க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
Devastating news from #Warsaw #Poland as earlier today a massive #fire threatens to engulf a major shopping center, home to 1,400+ stores and services.
— Mr. Shaz (@Wh_So_Serious) May 12, 2024
Thankfully, authorities have managed to bring the situation under control.
pic.twitter.com/XDROgt9Ori
போலந்து தலைநகர் வார்ஷாவில் மேரிவில்ஸ்கா 44 என்ற பிரம்மாண்டமான ஷாப்பிங் சென்டரில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த வணிக வளாகத்தில் 1,400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், தீ விபத்து 1,000க்கும் மேற்பட்ட கடைகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. உடனடியாக தீ மளமளவென பரவியதில் அடுத்தடுத்து கடைகளும் எரிந்து நாசமானது.
கடைகளில் இருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால், யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து தகவலறிந்து சுமார் 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வணிகவளாகத்தின் பல்வேறு திசைகளில் இருந்தும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!