அதிக வரத்து... காய்கறிகளின் விலை குறைந்தது.. முட்டை கோஸ் கிலோ ரூ.5க்கு விற்பனை!

 
இன்னும் 10 நாட்களுக்கு காய்கறி தட்டுப்பாடு இருக்கும்: மக்களே உஷார்..!!

ஒரு பக்கம் காய்கறி விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் முட்டை கோஸ் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ முட்டை கோஸ் கிலோ ரூ.5க்கு விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 73% அதிகமாக பெய்துள்ளது. கர்நாடகாவிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக மேட்டூர் உள்ளிட்ட தமிழக அணைகள் நிரம்பியுள்ளன. நல்ல மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.

இன்றைய உழவர் சந்தை காய்கறி, பழங்கள் விலை விபரம்! உயரத் தொடங்கியது தக்காளி விலை!

கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், முருங்கைக்காய், பீ்ட்ரூட், புடலங்காய், நூக்கல் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ தலா ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் முட்டைகோஸ் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி முட்டைகோஸ் கிலோ ரூ.5க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. எப்போதும் உச்சத்தில் இருக்கும் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகிறது. அவரைக்காய், கேரட் கிலோ ரூ.50க்கும், பச்சை மிளகாய், பீன்ஸ் தலா ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.25, தக்காளி ரூ.22, பாகற்காய் ரூ.20 என விற்கப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web