மோடிக்காக ஒத்திவைக்கப்பட்ட பதவியேற்பு விழா.. ஜூன் 12ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

 
சிறப்பு கட்டுரை | அது ஆச்சு 20 வருஷம்...தேசிய அரசியலில் மீண்டும் கிங் மேக்கராக விஸ்வரூபமெடுக்கும் சந்திரபாபு!

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணியில் அங்கம் வகித்த ஜனசேனா 21 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

சந்திரபாபு நாயுடு

ஆண்ட ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது.  ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு வரும் 8ம் தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு

மோடிக்கான பிரதமர் பதவியேற்பு விழாவை முன்னிட்டு ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சந்திரபாபு நாயுடு. ஜூன் 8ஆம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்பதால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web