வளர்ச்சி வெற்றி பெற்றுள்ளது... மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி... பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

 
modi

 மகாராஷ்டிரா மாநிலத்தில்  நவம்பர் 20ம் தேதி மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக   தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மாலை நிலவரப்படி  மகாராஷ்டிராவில்  தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.

இந்த வெற்றியை பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சட்டசபை தேர்தல் வெற்றிக்காக மகாராஷ்டிரா  மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது  'எக்ஸ்' தளத்தில்  , "வளர்ச்சி வெற்றி பெற்றுள்ளது. நல்லாட்சி வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல்

நாம் ஒற்றுமையுடன் இன்னும் பல உயரங்களை அடைவோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்காக மகாராஷ்டிரா  மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்பும், அரவணைப்பும் ஈடு இணையில்லாதது. மகாராஷ்டிரா  மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து உழைக்கும்" என பதிவிட்டுள்ளார்

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web