வைரல் வீடியோ.. தமிழக மீன்பிடி வலைதயாரிப்பாளரை கட்டியணைத்த மோடி!!
இன்று விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாட்டில் ”விஸ்வகர்மா யோஜனா ” திட்டத்தை பிரதமர் போடி தொடங்கி வைத்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
The love, genuine respect and affection of Common man for the PM can be seen in this clip when PM Modi honoured Vishwakarma from Tamilnadu who makes fishing nets. pic.twitter.com/Er8cWDwHtu
— Megh Updates 🚨™ (@MeghUpdates) September 17, 2023
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், குயவர்கள், கொல்லர்கள், மீன்பிடி வலை தயாரிப்பாளர்கள், சுத்தியல், பூட்டு தயாரிப்பாளர்கள்,செருப்பு தொழிலாளர்கள், காலணி தயாரிப்பாளர்கள், மாலை தயாரிப்பாளர்கள், பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளர்கள், ஆயுதம் தயாரிப்பாளர்கள் உட்பட பல துறையினர் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர்.
இந்நிகழ்வில் கைவினைக் கலைஞர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அதில் தமிழக மீன்பிடி வலை தயாரிக்கும் கே.பழனிவேலுவுக்கு விஸ்வகர்மா திட்டத்திற்கான சான்றிதழை வழங்கினார் பிரதமர் மோடி பழனிவேலை நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்த தருணம்கைவினை கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி “விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பயனாளிகளை அங்கீகரிப்பது காலத்தின் கட்டாயம். இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களின் திறன்கள் வெளிப்படும். அத்துடன் அவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களும் உலகம் முழுவதும் புதிய அடையாளத்தைப் பெறும்” மோடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...