வீட்டில் தீபமேற்றும் போது இந்த மந்திரத்தை உச்சரித்தால் செல்வ வளம் கிடைக்கும்!

 
தீபம்

தினந்தோறும் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் தரும். இல்லத்தில் குதூகலம் நீடிக்கும். பொதுவாக நமது வீடுகளில் காலையில் எழுந்து தீபம் ஏற்றி இறைவனை வணங்குவது வழக்கம். அதே போல மாலையிலும் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். 

நாம் காலையில் தீபம் ஏற்றுகையில் கீழே உள்ள மந்திரம் அதை கூறினான் அது நம்முடைய வழிபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். இதன் மூலம் நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றி கிடைக்க வழிபிறக்கும், அதிஷ்டம் உண்டாகும். 

இன்று எம தீபம் ஏற்றும் நேரம்  இதுதான்!!

தீப மந்திரம்: 

ஸோயம் பாஸ்கர வித்யஸ்த 

கிரணோத்கர பாஸ்வா

தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்

சுப்ரபாதம் குருஷ்வமே.

அகல் விளக்கு தீபம்

இந்த மந்திரத்திற்கு என்ன பொருள் என்று தெரிஞ்சுக்கோங்க. இந்த உலக மக்களை காத்து, அவர்களுக்கு நல்லறிவை வழங்கக்கூடிய கதிர்களை இவ்வுலகம் முழுக்க பரப்பும் தீபமே.... என்னுடைய இந்த நாள் சிறப்பாக இருப்பதற்கு உங்களது அருளை வேண்டுகிறேன்.

தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது மிக நல்ல வைப்ரேஷனைத் தரும். இல்லத்தில் எப்போதும் சந்தோஷம் நிலைக்கொள்ளும். அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அறிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும். நமக்கு சாதகமாக பல விஷயங்கள் நடப்பதை நாமே கண்கூடாக பார்க்கலாம்.

இந்த மந்திரத்தின் சக்தியானது ஒரு நாள் முழுவதும் நமக்கு வெற்றியை தேடி தரும். ஆனால் இதெல்லாம் ஒரு நாள் ஜபிப்பதால் நடந்துவிடாது. குறைந்தது ஒரு மண்டலமாவது இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வந்தால் அதன் பலனை உணரலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web