ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றபோது விபரீதம்.. கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 
நாகராஜன், தீபக், சண்முகசுந்தரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கருடாமுத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன், தீபக், சண்முகசுந்தரம், கார்த்திகேயன் ஆகியோர் காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இவர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து செல்ல ராமேஸ்வரம் வந்துள்ளனர். இங்குள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற அவர்கள் கலசத்துக்கு தண்ணீர் எடுத்து வந்தனர்.

விபத்து

நேற்று மதியம் 12 மணியளவில் ராமநாதபுரம் அருகே களத்தாவூர் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, ​​கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த நாகராஜன், தீபக், சண்முகசுந்தரம் ஆகியோர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு நபர் கார்த்திகேயன் காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் பஜார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டு, காயமடைந்த கார்த்திகேயனை மீட்டு ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கார்த்திகேயனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தண்ணீர் எடுக்க சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web