அவலம்.. மருத்துவர்கள் பற்றாக்குறை.. கால் கடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்!

 
. வால்பாறை அரசு மருத்துவமனை

கோவை மாவட்டம். வால்பாறை அரசு மருத்துவமனையில். மருத்துவர்கள், செவிலியர்கள் ,பணியாளர்கள்   பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.. கடந்த. ஆண்டு 9.44 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்நிலையில் 10 மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவமனையில் தற்சமயம் நான்கு மருத்துவர்களே உள்ளனர்.

இதனால் அவசரத் தேவையான விபத்து, வனவிலங்குகளால் பாதிப்பு மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை உள்பட  நோயாளிகளை கவனிப்பதற்கு மருத்துவர்கள் பற்றாக் குறையாக உள்ளது. இதனால் நோயாளிகள் கால் கடுக்க நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல கோடி ரூபாயில் கட்டப்பட்ட மருத்துவமனை பொதுமக்களுக்கு காட்சி பொருளாகவே காணப்படுகிறது. மேலும் இந்த மருத்துவமனையில் ஸ்கேன் இசிஜி ரத்தப் பரிசோதனை எடுக்கவும் வெகு நேரம் காத்திருக்கின்றனர்.

துப்புரவு பணியாளர் சமையலர், இரவு காவலர் உள்ளிட்ட 62 பணியாளர்கள் பணி செய்யக்கூடிய நிலையில் குறைந்த   பணியாளர்களே பணி செய்துவருகின்றனர்.  இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக காலி பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்து வால்பாறை பகுதியில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web