ஜியோ சிம் கார்டு விற்பனையாளர் எனக் கூறி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்.. அலறிய வீட்டு உரிமையாளர்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரேம். இவர் அதே பகுதியில் தனது வீட்டிற்கு முன்பாக மளிகைகடை நடத்தி வரும் நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டு வீட்டில் ஓய்வு எடுத்திருந்த நிலையில் அவரது மனைவி கடையில் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் ஜியோ சிம் கார்டு விற்பனையாளர் என கூறியுள்ளார். அந்த இளைஞர் மீது சந்தேகமடைந்த பிரேம் அவரிடம் சிம் கார்டு அல்லது ஐடி கார்டு கேட்டுள்ளார்.
அதை காண்பிக்காததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் அவரைப் பிடித்து விசாரிக்க முயன்ற போது அந்த இளைஞர் வைத்திருந்த விஜய் ரசிகர் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடியுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
ஏற்கனவே அந்தப் பகுதியில் பல்வேறு வீடு, கடைகளில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள நிலையில் இது போன்ற மர்ம நபர்களால் சொந்த கிராமத்திலேயே அச்சத்தில் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரியும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!