நெல்லையப்பர் கோவில் புதிய தேருக்கு 100 கிலோ வெள்ளி வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு!
திருநெல்வேலி மாவட்டம், நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்வதற்காக 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை வழங்கி வெள்ளித்தகடு பதிக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
நெல்லை, நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்யப்பட இருக்கிறது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை வழங்கி, வெள்ளித்தகடு பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்தது.
அதனைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை, நெல்லையப்பர் கோவிலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெள்ளித்தேர் 1991-ம் ஆண்டு தீ விபத்தில் எரிந்து விட்டது. சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் ராஜரத்தினம், சபாபதி ஆகியோர் 100 கிலோ வெள்ளிக்கட்டியை வழங்கியுள்ளனர்.
இதன் மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சம் ஆகும். அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் புதிய வெள்ளித்தேரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் 68 தங்கத்தேர்களும், 55 வெள்ளித்தேர்களும் உள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பின் ரூ.29 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்களும், ரூ.27.16 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.1,000 கோடிக்கு மேல் உபயதாரர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். மருதமலை முருகன் கோவிலுக்கு விடுமுறை நாட்களில் வாகனங்கள் அதிகளவில் வருவதால் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும் இ-பாஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.
பருவமழை காலங்களில் கோவில்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால்கள் மூலம் தெப்பக்குளங்கள் முழுமையாக நீர் நிரம்பும் வகையில் அவை தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கோவில் செயல் அலுவலர்கள், மண்டல இணை ஆணையர்கள் தொடர்ந்து கண்காணித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!