அமைச்சர் மா.சு. ராஜினாமா செய்துவிட்டு ஸ்டாலினின் பி.ஏ. ஆகலாம்... தமிழ்நாடு மருத்துவத்துறை தப்பிக்கும்... ஜெயக்குமார் ஆவேசம்!

 
ஜெயக்குமார்

இன்று சென்னையில் உள்ள கலைஞர் அரசு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வைகை செல்வன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

மருத்துவர்

பாலாஜியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஆயுதத்துடன் ஒருவர் மருத்துவமனைக்கு வருகிறார். அவரை ஏன் பரிசோதிக்கவில்லை. எம்சிஐ பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அதில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து விதித்துள்ள விதிமுறைகள் முறையே பின்பற்றப்படவில்லை. இந்த ஆட்சியில் மருத்துவர்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பு இல்லை. 

சார்பட்டா பரம்பரை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

மக்கள் நிம்மதியாக சென்று நிம்மதியாக வர முடியவில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மருத்துவமனைக்கு கருணாநிதி பெயர் மட்டும் வைத்தால் போதுமா? சட்ட விதிகள் படி பாதுகாப்பை ஸ்டாலின் அரசு வழங்கவில்லை. எதிர்காலத்தில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடக்காத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமைச்சர் மா.சு பதவியை ராஜினாமா செய்து விட்டு ஸ்டாலினின் பி.ஏ.வாக வைத்து கொண்டால் தமிழ்நாடு மருத்துவ துறை தப்பிக்கும்" என்றார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web