இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும்... ஐபிஎல் கொண்டாட்டம்!
Updated: Mar 28, 2025, 06:00 IST

சென்னையில், கிரிக்கெட் ரசிகர்களுக்காக இன்று நள்ளிரவு 1 மணி வரையில், போட்டி முடிந்ததும் வீடு திரும்புபவர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் மார்ச் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த போட்டியின் படி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டியின் அடிப்படையில் இன்று நள்ளிரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்து ரசிகர்கள் பாதுகாப்பாக திரும்பவதற்காக, நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ சேவைகள் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
From
around the
web