மெய்யழகன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்... !
நடிகர் சிவக்குமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி தனக்கெனத் தனிப்பாணியில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இந்த திரைப்படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனத் தயாரிப்பில் வெளியானது. செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மெய்யழகன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் வலைதளத்தில் இன்று அக்டோபர் 25ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியானது. மெய்யழகன் திரையரங்குகளில் வெளியானபோது, விமர்சனங்களை தொடர்ந்து, சில காட்சிகள் நீக்கப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் நீக்கம் செய்யப்படாத காட்சிகளுடன் முழுமையாக படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!