"ஏற்கனவே மருத்துவ மாணவி இறந்திருந்தாங்க” உண்மை கண்டறியும் சோதனையில் குற்றவாளி வாக்குமூலம்!
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்தவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, உண்மை கண்டறியும் சோதனையில், “ஏற்கெனவே தான் கருத்தரங்கு அறைக்குள் செல்லும் போதே மருத்துவ மாணவி உயிரிழந்த நிலையில் இருந்தார்” என்று குற்றவாளி கூறியிருப்பது வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற ஒருவர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் சஞ்சய் ராயிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் நேற்று சஞ்சய் ராய், கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 7 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் சஞ்சாய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை 4 மணி நேரம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உண்மை கண்டறியும் சோதனையில் சஞ்சய் ராய் சில திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார். விசாரணையின் போது, சஞ்சய் ராய் குற்றம் நடந்த இரவில் என்ன செய்தார் என்பதை விவரித்தார். மேலும், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சஞ்சய் ராய் கூறியதாக வெளியான தகவலின்படி, "ஆகஸ்ட் 8ம் தேதி சஞ்சய் ராய் ஆர்ஜி மருத்துவமனையில் இருந்த தனது நண்பரின் சகோதரரைப் பார்ப்பதற்கு சென்றுள்ளார். இரவு 11.15 மணிக்கு ராயும், அவரது நண்பரும் மருத்துவமனையில் இருந்து வெளியேறி அருகே உள்ள கடையில் மது அருந்தியுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து வடக்கு கொல்கத்தாவில் பாலியல் தொழில் நடக்கும் சோனாகாச்சி பகுதிக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து வேறொரு விபச்சார பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சஞ்சய் ராய் யாரிடமும் உடலுறவு கொள்ளவில்லை. தெருவில் ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார்.
பின்னர், செட்லா பகுதியில் தனது நண்பர் அறைக்குள் சென்ற நிலையில், சஞ்சய் ராய், தனது காதலியுடன் வீடியோ கால் பேசியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மருத்துவமனைக்குத் திரும்பிய ராய் நான்காவது மாடியில் உள்ள கருத்தரங்கள் மையத்திற்குள் சென்றனர். அங்கு அதிகாலை 4.03 மணிக்கு கருத்தரங்கு அறைக்குள் சென்றுள்ளார்.
ஆர்ஜி கர் மருத்துவமனையின் கருத்தரங்கு அறைக்கு சஞ்சய் ராய் சென்றபோது, பெண் மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், தான் பாலியல் ரீதியாக உடலுறவு கொண்டதாகவும், அதன் பின்னர் பயத்தில் மருத்துவமனையில் இருந்து ஓடிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தாக கூறப்படுகிறது.
உண்மை கண்டறியும் சோதனையின் போது, சஞ்சய் ராய் பதட்டமாகவும் கவலையாகவும் இருந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. திடீர் திருப்பமாக தன்னை குற்றவழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!