கல்லூரி விடுதியின் 5வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!

 
கல்லூரி விடுதி

 தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் மீனாட்சி மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவி, கல்லூரியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் மீனாட்சி மருத்துவ கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்து படித்து வருகின்றனர். 

சு

இந்நிலையில், ஞாயிறு விடுமுறை தினமான நேற்று கல்லூரி விடுதியில் தங்கி இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்த ஷெர்லி எனும் மாணவி, விடுதியின் 5வது மாடியில் அழுதுக் கொண்டே கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவ, மாணவிகள் அந்த பகுதியில் உடனடியாக திரண்டதால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

நேற்றிரவு விடுதியின் 5வது மாடியில் மாணவி ஷெர்லி கீழே குதிப்பதற்ஆக அழுதுக் கொண்டே நின்றுள்ளதைப் பார்த்த மாணவ, மாணவிகள் உடனடியாக இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் அந்த மாணவி கீழே குதித்து விட்டதாக கூறப்படுகிறது. 

உத்தரபிரதேச போலீஸ்

இதில் படுகாயமடைந்த ஷெர்லியை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்த மாணவி ஷெர்லி எதற்காக தற்கொலைச் செய்து கொண்டார் என்கிற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web