ஏப்.4ல் மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு விழா... தமிழில் மந்திரங்கள் ஓதி வழிபாடு!

 
மருதமலை முருகர் முருகன்

ஏப்ரல் 4ம் தேதி, கோவை மாவட்டம் மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில் குட முழுக்கு நடத்தப்பட உள்ளது. தமிழ்கடவுளான முருகனின் கோவிலில் குட முழுக்கின் போது முழுக்க முழுக்க தமிழில் மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்தப்பட உள்ளது. 

முன்ந்தாக தமிழில் மந்திரங்கள் ஓத, உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அந்த மனுவில், குடமுழுக்கின் போது, வேள்வி குண்ட நிகழ்வுகளில் வேள்வி ஆசிரியராக தமிழ் சைவ மந்திரங்கள் ஓதுவதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அறநிலைய துறைக்கு மனு அளித்ததாக கூறியுள்ளார். 

மருதமலை முருகர் முருகன்

தமிழில் குட முழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என மனுதாரர் கூறியுள்ளார். தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜர் ஆன சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், ஏற்கனவே இது போன்ற நடைமுறைகளை பின்பற்றி வருவதாக சுட்டிக்காட்டினார்.

பழனி கோவில், கோவை பட்டீஸ்வரர் கோவில்களில் 34 சிவாச்சாரியர்களை வைத்து தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகவும் அதே போல் மருதமலை கோவிலிலும் நடத்தப்படும் என தெரிவித்தார். 

மருதமலை முருகர் முருகன்

மனுதாரர் தரப்பில் யாகசாலைக்கு வெளியே தனியாக மேடை அமைத்து ஓதுவார்கள் கச்சேரி மட்டுமே நடைபெறுவதாகவும், யாக சாலையில் தமிழ் மந்திரங்கள் ஓதுவது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.  

இருதரப்பு  வாதங்களை கேட்ட நீதிபதி, இது அரசின் கொள்கை முடிவு எனவும்,  இதில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றது அல்ல எனவும் தெரிவித்து, இது குறித்து மார்ச் 28 ம் தேதிக்குள் பதில் அளிக்க  இந்து சமய அறநிலைத்துறைக்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, தமிழில் யாக சாலையிலும் மந்திரங்கள் ஓதப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web