பரபரப்பு... மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி !
மன்சூர் அலிகான் மகன் துக்ளக் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்காக 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த நடிகர் மன்சூர் மகனிடம் சாப்பிட்டாயா என நீதிமன்ற வளாகத்தில் கேட்டது பெரும் நெகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இந்நிலையில் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் சிறுநீர் மாதிரி பரிசோதனையில் கஞ்சா பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தம்பெட்டமைன், கொக்கைன் இவைகளை பயன்படுத்தவில்லை என்றும் மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ” ஏற்கெனவே கைதானவர்களின் செல்போனில் இருந்த எண்கள் அடிப்படையில்தான் மகன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து தெரியவில்லை ” எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகானின் சிறுநீர் மாதிரி பரிசோதனையில் கஞ்சா பயன்படுத்தியது உறுதியாகி உள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!