"மனோஜ் போய்ட்டான்டா...” சீமானைப் பார்த்ததும் நெஞ்சில் கைவைத்து கதறியழுத பாரதிராஜா!

 
மனோஜ்

தமிழ் திரையுலகினரை நடிகர் மனோஜ் மறைவு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில், திரையுலக பிரமுகர்களும், பொதுமக்களும் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்த சென்ற போது, அவரால் எப்போதும், “அப்பா...அப்பா” என்று அன்போடு  அழைக்கப்படும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, கண்ணீர்விட்டு கதறி அழுது, “மனோஜ் போய்ட்டாண்டா..” என்று சீமான் நெஞ்சில் கை வைத்து கதறியழுதது அனைவரையும் உலுக்கியது.

மனோஜ்

இயக்குநர் பாரதிராஜாவின் பிரியமான உதவியாளர்களில் ஒருவராக வலம் வந்தார் சீமான். அந்த  அன்பு இப்போது வரையில் இருவரிடையேயும் தொடர்கிறது. சீமானின் பேச்சுகளில் எப்போதும் அப்பா என இயக்குநர் பாரதிராஜாவையும், மணிவண்னனையும் குறிப்பிடுவது வழக்கம். பாரதிராஜாவும் வேறு எந்த இயக்குநரையும் அழைக்காமல், சீமானை மட்டும் அப்போதில் இருந்தே பதிலுக்கு 'மகனே' என்று தான் அழைப்பார். 

மனோஜ் பாரதி

இந்நிலையில் மனோஜ் மறைவு செய்தி கேட்டு, சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற சீமானைப் பார்த்ததும், சீமானின் கைகளைப் பிடித்தபடி, அவரின் நெஞ்சில் கை வைத்து, “மனோஜ் போய்விட்டான்டா” என புலம்பியபடியே பாரதிராஜா கண்ணீருடன் கதறியழுதது அனைவரது நெஞ்சையும் கனக்க வைத்தது. சீமானும் கண்ணீரை அடக்க முடியாத பெருந்துயரில் நின்றார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web