உச்சநீதிமன்ற நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு!
உச்சநீதிமன்ற நீதிபதியாக மன்மோகன் பதவியேற்றுக்கொண்டார். நீதிபதி மன்மோகனுக்கு இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதாக மத்திய அரசு டிசம்பர் 3ம் தேதி அறிவித்திருந்தது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், நீதிபதி மன்மோகனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற கொலிஜியம் நீதிபதி மன்மோகன் பதவி உயர்வு குறித்து நவம்பர் 28 ம் தேதி அறிவித்திருந்த நிலையில் இந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!