'மஞ்சும்மேல் பாய்ஸ்' பிரபலம் அனில் சேவியர் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!
இந்தியாவில் ஜான் இ மான், தள்ளுமாலா, மஞ்சுமேல் பாய்ஸ், தெக்கு வடக்கு உள்ளிட்ட படங்களின் இணை இயக்குநரும் சிற்பியுமான அனில் சேவியர் (39) நேற்று காலமானார். அவரது திடீர் மறைவு மலையாள திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனில் சேவியர் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அனில் சேவியர் மற்றும் அவரது மனைவி அனுபமா எலியாஸ் ஆகியோர் அங்கமாலியை மையமாகக் கொண்ட கலைத் திட்டத்தில் பணியாற்றி வந்தனர். திரிபுனித்துரா ஆர்.எல்.வி கல்லூரியில் பி.எஃப்.ஏ முடித்த அனில், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் சிற்பக்கலையில் எம்.எஃப்.ஏ. முடித்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் தனது சக ஊழியரான ரோஹித் வெமுலாவின் நினைவுச் சிற்பத்தை உருவாக்கியதற்காகவும் இன்றளவும் கொண்டாடப்படுகிறார் அனில். இவரது மறைவுக்கு மலையாள திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!