மாணவர்கள் உதவித்தொகை நிதியில் கையாடல்... பள்ளி ஆசிரியை கைது!
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழநி நெய்க்காரப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் உதவித்தொகைக்கான நிதியில் கையாடல் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நெய்க்காரப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் சின்னக்கலையம்புத்தூரைச் சேர்ந்த விஜயா என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இதே பள்ளியில் தலைமையாசிரியராக இருந்துள்ள விஜயா, அப்போது, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கிய உதவித்தொகை நிதியில் லட்சக் கணக்கில் கையாடல் செய்தது தெரியவந்தது.
இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பழநி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஆசிரியை விஜயாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை கையாடல் செய்த வழக்கில் பள்ளி ஆசிரியை கைதான சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், மாணவர்கள், பெற்றோர்களிடையேயும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!