வேட்டையன் ‘மனசிலாயோ’ பாடல் வீடியோ வெளியீடு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருந்தபோதிலும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளது.
The much-awaited visual treat is here! 🤩 #MANASILAAYO 🥁 video song from VETTAIYAN 🕶️ is OUT NOW. ▶️ Let the vibe take over again! 🔥
— Lyca Productions (@LycaProductions) October 28, 2024
🔗 https://t.co/o87Fut0XFA#VettaiyanRunningSuccessfully 🕶️ in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan… pic.twitter.com/B3INHV14sH
இப்படத்தில், அனிருத் இசையமைத்த 'மனசிலாயோ' பாடல் வெளியீட்டுக்கு முன்பே பெரிய கவனம் பெற்றது. இத்துடன் இந்த பாடல் இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டது.சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் வரிகளில் இப்பாடல் உருவானது.
இப்பாடலை அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியிருந்தனர். அத்துடன் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியிருந்தனர். பாடல் வரிகளுக்கேற்ப நடிகர்கள் ரஜினி மற்றும் மஞ்சு வாரியரின் நடன அசைவுகளும் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மனசிலாயோ பாடலின் வீடியோ வடிவத்தை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.