கடும் குளிர் காரணமாக பரிதாபமாக பலியான நபர்.. போலீசார் தீவிர விசாரணை!

 
சேகர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. நான்கு நாட்களாக மழை ஓய்ந்து பகலில் வெயில் அதிகரித்துள்ளது. மாலை நேரங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் கடுமையான உறைபனி நிலவுகிறது. இதனால், அதிகாலை நேரங்களில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீதும், புல்வெளிகள் மீதும் தண்ணீர் துளிகள் விழுவது வாடிக்கையாக உள்ளது.

கடும் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து மேல் குன்னூர் இன்கோ சார்வ் செல்லும் சாலையில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக குன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் குன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் இறந்த சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவரின் பெயர் சேகர் என்பதும், கடும் குளிர் காரணமாக இறந்தது தெரியவந்தது.

கொலை

உயிரிழந்தவர் சம்பவ இடத்தில் பல நாட்களாக தூங்கி கொண்டிருந்ததாகவும், குளிர் தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web