மல்லை சத்யா ராஜினாமா? மதிமுகவில் மீண்டும் சலசலப்பு!

மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார் என மல்லை சத்யா கூறியுள்ளார்.மல்லை சத்யா உடனான முரண்பாட்டால் பதவியில் இருந்து துரை வைகோ விலகியதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் துரை வைகோவின் விலகல் கடிதம் ஏற்கப்படவில்லை. நிர்வாகிகள் அவரை அதே பதவியில் நீடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மல்லை சத்யா வருகை தந்த போது கூட்டத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எழுந்து வணக்கம் கூட செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நிர்வாகக் குழு கூட்டத்தில் உரையாற்றிய மல்லை சத்யா, “மதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார். நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள். மதிமுகவில் கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டு போகிறேன். துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் கூறியது நான் தான்” எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!