திருச்செந்தூரில் அடுத்தடுத்து ஆண், பெண் சடலங்கள் மீட்பு!

 
க்ரைம்
 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வெவ்வேறு பகுதியில் கிடந்த ஆண், பெண் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ஒரு ஆண் சடலம் கிடைப்பதாக கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். 

ஆம்புலன்ஸ்

இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். நீல நிற சட்டை, வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து கீழ திருச்செந்தூர் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே போன்று திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் மெயின்ரோடு செந்தூர் நகரில் ஒரு தோட்டத்தில் பெண் சடலம் கிடப்பதாக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

உத்தரபிரதேச போலீஸ்

உயிரிழந்து கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். சிகப்பு நிற சேலை அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கீழ கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web