ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்யுங்கள்.. தமிழக அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
சென்னை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒப்பந்த சுகாதார பணியாளர்களை 12 வாரங்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் 81 ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பள்ளதாவது,
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாநகராட்சிகளில் சுகாதார பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால், பணி நிரந்தரம் செய்து, ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் 81 பேர், பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் அந்த மனுவில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒப்பந்த சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த ஒப்பந்த சுகாதார பணியாளர்களை 12 வாரங்களில் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!