ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
இன்று புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம். இந்த மாதத்தை துலா மாதம் என்பர். இந்த மாதத்தில் தான் இரவும், பகலும் சமமான நேரமாக அமையும். துலா என்றால் தராசு. இந்த ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது புண்ணியம்’ என்கிறது நமது சாஸ்திர நூல்கள்.
இந்த மாதத்தில் தான் மற்ற நதிகளும், புண்ணிய தீர்த்தங்களும் காவிரியில் சேரும் மாதம். இதனால் இந்த மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள் பஞ்ச மகா பாவங்களிலிருந்தும் விடுபடுவர் என்பது ஐதிகம்.மேலும் இந்த மாதத்தில் காவிரியில் நீராடினால் காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்கின்றன நமது புராணங்கள்.
இந்த ஐப்பசி மாதத்தில் தான் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதிகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாவங்களை போக்கிக் கொள்கின்றன. இதனால் மனிதர்களும் இம்மாதத்தில் நீராடினால் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை இவற்றை அள்ளி வழங்கும்.
காவிரியில் நீராடி நீர்க்கடன் செலுத்துபவர்களின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவதாக ஐதிகம். ஐப்பசி மாதத்தில் நீராடல் ஒரு பக்கம் விசேஷம். மற்றொரு பக்கம் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படும்.