காதல் திருமணம்... கதறும் இளம்பெண்... 4 வருஷமாகியும் கொலைவெறியோடு சுற்றும் உறவினர்கள்!

 
ஷாலினி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷாலினி. இவருக்கும் கல்லிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி நடந்த இந்த காதல் திருமணம், போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றதால், 'எங்கள் பொண்ணுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' என, ஷாலினியின் அம்மா, அப்பா கடிதம் எழுதி கொடுத்தனர்.

இதற்கிடையில் ஷாலினியின் கணவர் சேதுபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் ஷாலினி தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் புதுநகரில் உள்ள கணவரின் சகோதரி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஷாலினியின் உறவினர்கள் நீ ஏன் இங்கு வந்தாய் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறி ஷாலினியின் மாமனார் சுப்பிரமணி மற்றும் பெண்களை கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

ஷாலினி, சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர் லலிதா ஆகியோர் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் சம்பந்தப்பட்டவர்களை இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்புக் கோரி, ஷாலினி மற்றும் அவரது உறவினர்கள் கைக்குழந்தையுடன் எமனேஸ்வரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், எதிர் தரப்பினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் கண்ணீருடன் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web