நெகிழ்ச்சி... தாங்க முடியாத நெஞ்சுவலி ... பேருந்தை சாலையில் ஓரம்கட்டி பயணிகளின் உயிரை காத்த ஓட்டுனர் பலி!

 
ஸ்ரீதர்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர்  பூந்தமல்லி மாநகர பேருந்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.   இவர் நேற்று பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை மாநகர பேருந்தில் டிரைவராக பணிசெய்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து  நேற்று மாலை 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர பேருந்தை டிரைவர் ஸ்ரீதர் ஓட்டிவந்துள்ளார்.

ஓட்டுனர்

பணியின்போது ஸ்ரீதருக்கு திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் நெஞ்சு வலியை பொறுத்துக் கொண்டு, மாநகர பேருந்தை பத்திரமாக சாலையோரத்தில் நிறுத்திவிட்டார்.  ஓட்டுனர் சீட்டில் அமர்ந்தபடியே மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.சீட்டிலேயே மயங்கி விழுந்த டிரைவர் ஸ்ரீதரை கண்டக்டர் மற்றும் சக பயணிகள் மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட்டுனர் நடத்துனர்

அங்கு டிரைவர் ஸ்ரீதருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு டிரைவர் ஸ்ரீதர் பரிதாபமாக பலியானார். அவர் பணியின்போது நெஞ்சுவலியால் அவதிப்பட்டும், மாநகர பேருந்தை பத்திரமாக சாலையோரத்தில் நிறுத்தி, 20க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web