நெகிழ்ச்சி.. கடல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு.. ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி!
அரவிந்த் தருண்ஸ்ரீ சென்னை மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்ச்சர் என்ற ஆழ்கடல் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது காதலி தீபிகா ஒரு ஆழ்கடல் பயிற்சியாளர். சுத்தமான காற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த காலத்தில் பாராகிளைடிங் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.
இந்த சூழ்நிலையில், கடல்வாழ் உயிரினங்களை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஜோடி இப்போது நீருக்கடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு வருடமாக காதலித்து வரும் தீபிகாவும் ஜான் டி பிரிட்டோவும், புதுச்சேரி நீரில் 50 அடி ஆழத்தில், 5 கிலோமீட்டர் தொலைவில் இன்று நடந்த திருமண விழாவில் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “கடல் பாதுகாப்பு மற்றும் கடல்வாழ் உயிரின பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆழ்கடல் பயிற்சியாளர்களாகிய நாங்கள், கடல்வாழ் உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், காற்று மாசுபாட்டைத் தடுக்கவும் கடல் மாசுபாட்டைத் தடுப்பதை வலியுறுத்துவதற்காக இந்த வழியில் திருமணம் செய்து கொண்டோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!