மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 
ராகுல் ஸ்டாலின்


 
 
இந்தியாவில் நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று 3 வது முறையாக மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக  காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தற்காலிக சபாநாயருக்கு காங்கிரஸ் சார்பில் முறைபடி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர்  ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அன்பு சகோதரர் ராகுல் காந்தியை அவரது புதிய பதவியுடன் ‘இந்தியா' கூட்டணி வரவேற்கிறது. அவரது குரல் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும் எனக் குறிப்பிட்டு வாழ்த்தினை பதிவிட்டுள்ளார். இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web