கொல்கத்தா மருத்துவ மாணவியைப் போல உங்களையும்... மிரட்டிய ஆட்டோ ஓட்டுநரை துவைத்து போட்ட மாணவிகள்!

 
பாலியல் நாக்பூர்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவருக்கு நடந்ததைப் போல, உங்களையும் செய்வோம் என்று மிரட்டிய ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரை இரண்டு பள்ளி மாணவிகள் சேர்ந்துக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளி மாணவிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

"கொல்கத்தாவில் மருத்துவ மாணவிக்கு என்ன நேர்ந்ததோ அதையே உங்களுக்கும் செய்வேன்" என்று கூறி மாணவிகளை ஆட்டோ ஓட்டுநர் மிரட்டியதால் நிலைமை தீவிரமடைந்தது. இதைத் தொடர்ந்து, 2 மாணவிகளும் ஓட்டுநரிடம் வாகனத்தை நிறுத்துமாறு கோரினர். அவர் ஆட்டோவை நிறுத்தியவுடன் அந்த மாணவிகள் அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துப் போட்டுத் தாக்கத் தொடங்கினர். 

பாலியல் நாக்பூர்

பள்ளி மாணவிகள் இருவர் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கவனித்த அருகில் இருந்தவர்கள், ஓட்டுநரின் மிரட்டலைக் கேட்டதும், மாணவிகளுடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.  அந்த மாணவி ஆட்டோ ஓட்டுநரை அறைந்தார். இந்தச் சம்பவம் நாக்பூரில் உள்ள பார்டி காவல் நிலையம் அருகே நடந்துள்ளது. 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web