”லியோ படத்தால் லாபம் இல்லை”.. திருப்பூர் சுப்ரமணியம் வேதனை..!!

 
லியோ
லியோ திரைப்படத்தால்  தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என  திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியான லியோ, முதல் 4 நாள்களில் ரூ.400 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதுவரை வெளியான தமிழ்ப்படங்களிலேயே அதிக வேகமான வசூல் லியோதான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் இப்படம் வருவாயை ஈட்டி வருகிறது. மேலும், இப்படம் ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லியோ Review: ஸ்டைலிஷ் மேக்கிங், தெறிக்கும் ஆக்‌ஷன் மட்டும் போதுமா?! | Leo  Movie Review - hindutamil.in

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் நேர்காணலில் கலந்துகொண்டு பேசினார்.  அப்போது பேசிய அவர்"லியோ படத்தால் தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. பங்கீட்டு தொகையாக 80 சதவீத்தை லலித்குமார் பெற்றுக்கொண்டார். கேரளா, கர்நாடகத்தில் 60 சதவீத பங்கீட்டு தொகையை வாங்கியவர்கள், தமிழகத்தில் அதிக தொகையைப் பெற்றனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தால் நியாயமாக நடந்திருப்பார்கள். லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ கடுமையான ஒப்பந்தத்தை போட்டனர். 

Jailer: `` `ஜெயிலர்' படத்தின் சிறப்புக் காட்சி ரத்து!" - உண்மையை விளக்கும் திருப்பூர்  சுப்ரமணியம் |tirupur subramaniam shares about jailer movie first show -  Vikatan

லியோவுடன் வேறு நல்ல படம் வெளியாகியிருந்தால் லியோவுக்கு இத்தனை திரையரங்கம் கிடைத்திருக்காது. தீபாவளி வரை வேறு படம் இல்லை என்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்ததால் பல திரையரங்குகள் விருப்பமில்லாமல்தான் இப்படத்தைத் திரையிட்டனர். லலித்குமார் போன்றவர்கள் இப்படி ஆதிக்கம் செலுத்தினால் சினிமா துறை எப்படி இயங்கும் எனத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.

From around the web