ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை... அரசு எச்சரிக்கை!

 
தமிழக அரசு

அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என பொதுமக்கள் மத்தியில் பரவலாக எண்ணம் உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற தவறான தகவல் பொதுமக்களிடையே பரவிய வண்ணம் உள்ளது. சில நிறுவனங்கள், பேருந்துகளில், கடைகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன.

உயர்நீதிமன்றம் 10 நாட்கள் விடுமுறை!!

இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை பணப்பரிமாற்றத்தின் போது வாங்க மறுப்பதோ அல்லது செல்லாது என கூறுவதோ சட்டப்படி குற்றமாகும். எனவே, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை அவமதிக்கும் வகையில், நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடை உரிமையாளர், எரிபொருள் நிலைய உரிமையாளர், வங்கி அலுவலர் மற்றும் பேருந்து நடத்துனர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web