மாஸ் வீடியோ... தலைவர் 170 படப்பிடிப்பு தொடக்கம்..!!
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற போதும் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து லால்சலாம் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் 170 வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ’லால்சலாம்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170வது படத்தில் பிஸியாகிவிட்டார்.
#Superstar @rajinikanth lands in #Trivandrum for the shoot of #Thalaivar170 . The film produced by @LycaProductions and directed by @tjgnan will happen at Vellayani Agricultural University and a house in Shankumukham regularly used for Malayalam films. pic.twitter.com/Bv860yekW4
— Sreedhar Pillai (@sri50) October 3, 2023
இந்த திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், பஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பும் முதல்கட்டமாக கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில் பகத்பாசில் மற்றும் மஞ்சுவாரியர் என இரு மலையாள நடிகர்கள் உள்ளனர்.
முதல்கட்டப் படப்பிடிப்பு கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்றார். இந்த காட்சிகளும், திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் கெத்தாக உள்ளே நுழையும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...