ஜம்மு- காஷ்மீரில் நிலச்சரிவு... 3 பேர் பக்தர்கள் உயிரிழப்பு... பலர் படுகாயம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு யாத்திரை செல்லும் வழியில் நிலச்சரிவால் சென்றுக் கொண்டிருந்த பக்தர்கள் மீது மலை துண்டு விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Jammu and Kashmir: Landslide occurred near the Panchi Helipad on the Shri Mata Vaishno Devi Bhawan route. There is a possibility that devotees may be trapped in the landslide. The Mata Vaishno Devi Shrine Board is conducting ongoing relief and rescue operations pic.twitter.com/T6nUHSLUdZ
— IANS (@ians_india) September 2, 2024
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியம், பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதையின் நிலையைக் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. நிலைமையை சமாளிக்க நிவாரண மற்றும் மீட்பு பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டன.
காயமடைந்த பக்தர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக, அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பாதையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செயல்முறையை விரைவுபடுத்த கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!