பெண்களே உஷார்... கர்ப்பமானதும் கம்பி நீட்டிய இன்ஸ்டா காதலன்... கதறும் இளம்பெண்!

 
இன்ஸ்டா காதல்

சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாலியல் குற்றங்களும், கஞ்சா புழக்கமும் அதிகரித்து வருகிறது. அரசே எல்லா வேலையையும் செய்ய முடியாது. பொதுமக்களான நாம் தான் நமது பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். குறிப்பாக ஆண் பிள்ளைகளுக்கும் பெண்மையை மதிக்க கற்று தாங்க. அப்போது தான் தமிழகம் பீகாராகவோ, உத்தரபிரதேசமாகவோ மாறுவதை தவிர்க்க முடியும்.

இன்ஸ்டாகிராம் மூலமாக பழகியவனுடன் காதலித்து படுக்கையைப் பகிர்ந்த நிலையில், கர்ப்பமானதும் ஓடிப் போனவனை நினைத்து கலங்கி நிற்கிறார் இளம்பெண் ஒருவர். திருச்சி மாவட்டம் பட்டவார்டு ரோடு ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 28). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் கார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பால்பண்ணை விஸ்வாஷ் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ பொன்னையன் என்ற வாலிபருடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது.

பாலியல்

அப்போது பொன்னையன் அந்த இளம் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை நேரில் அழைத்து பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் அவர் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்தால் அக்கம்பக்கத்தினர் தவறாக பேசுவார்கள் அதனால் கர்ப்பத்தை கலைக்க சொன்னதாக தெரிகிறது. இதை நம்பிய அனிதா கர்ப்பத்தை கலைத்தார்.

அதன் பிறகும் பொன்னையன் திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அனிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போதும் காதலன் திருமணம் செய்துக் கொள்வான் என்று நம்பி போலீசில் புகார் கொடுக்கவில்லை. அதன்பிறகு, காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதால், அவருடனான உறவை பொன்னையன் முறித்துக் கொண்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து புகார் அளித்தார். பின்னர், கமிஷனர் உத்தரவின் பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பொன்னையன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web