இயக்குநர் மாரி செல்வராஜுக்கு புகழாரம்!! ஆர்.கே. செல்வமணி வாழ்த்து!!

 
மாமன்னன்

ஜூன் 29ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்  திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில்   ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கான இசை   ஏ.ஆர்.ரஹ்மான்.ஒளிப்பதிவு  தேனி ஈஸ்வர்.  மாமன்னன் திரைப்படம்  வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மாமன்னன்

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு நேற்று முதல் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, நல்லகண்ணு, சி.மகேந்திரன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா.ரஞ்சித் உட்பட  பல திரைப் பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு  சிறப்பு திரையிடல் திரையிடப்பட்டது. இதில் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், லிங்குசாமி உட்பட   பலர் கலந்து கொண்டனர்.

மாமன்னன்
இந்த திரைப்படம்  குறித்து பேசிய ஆர்.கே.செல்வமணி, மாமன்னன் ஒரு மாபெரும் வெற்றிப் படம். ஒரு சிறந்த படத்தை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள். நான் படத்தை பார்த்துவிட்டு அனைவருக்கும் அப்போதே வாழ்த்து தெரிவித்தேன்.  வடிவேலுவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் யாரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். அவரின் மிகச்சிறப்பான நடிப்பிற்கு கூடுதல் பாராட்டுக்கள்.  இயக்குநர் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மென்மையாக  உணர்த்திவிட்டார். அவரது உழைப்பு அபாரமானது. உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் எனக்கு ஒரு பாதிப்பை மனதில் ஏற்படுத்தி விட்டது. தமிழ் சினிமாவிற்கு சிறந்த படத்தை தந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web