ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் கூழாங்கல் !

 
ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில்  கூழாங்கல் !


சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 94வது ஆஸ்கர் அகாடெமி விருதுகள் 2022 மார்ச் 27ல் நடைபெற உள்ளது. விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடத்தப்பட்டது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உட்பட 14 திரைப்படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.

மொத்தம் 15 நடுவர்கள் இந்த 14 திரைப்படங்களையும் பார்வையிட்டனர். அதில் மண்டேலா படம் சாதி அரசியல் ஆதிக்கத்தை அடிப்படையாக கொண்டது. ஒரு கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், தாழ்த்தப்பட்ட சிகையலங்கார நிபுணர் கேம் சேஞ்சராகிறார். இவரால் அந்த கிராமத்தில் மாற்றங்களை உருவாக்க முடிந்ததா என்பதை குறித்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் 2022ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான அதிகாரப்பூர்வ தேர்வாக கூழாங்கல் அமைந்து உள்ளது.

ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில்  கூழாங்கல் !

சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படத்துக்கு “டைகர் விருது” வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை “மதர் இந்தியா, சலாம் பம்பாய் மற்றும் லகான்” ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இந்திய திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டவை. துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web